எங்கும் இந்தியாவை கொண்டுசெல்வேன்: பத்மபூஷண் விருது பெற்ற சுந்தர் பிச்சை

இந்தியா

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சைக்கு, இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த சிறப்பான பணிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

கலை, சமூகப் பணி, பொதுநலன், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, வா்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப் பணிகள் என பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்குபவா்கள், உயரிய பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ போன்ற பத்ம விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டு வருகின்றனா்.

hands over padma bhushan to sundar pichai

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின்போது இந்த விருதுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான (2022) விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு, விருது பட்டியலில் இருந்தவர்களுக்கு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இதில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்த நிலையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்றுக்கொண்டார்.

இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.

இதுகுறித்து சுந்தர் பிச்சை, “இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி.

எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது. விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி.

hands over padma bhushan to sundar pichai

என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி.
இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன்.

நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும்போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.

கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும்.

எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெ.பிரகாஷ்

எடப்பாடி வழக்கு: அறப்போர் இயக்கம் மேல்முறையீடு!

குஜராத் 2ம் கட்ட தேர்தல்: இன்றுடன் பிரசாரம் நிறைவு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *