சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு ஜவுளித்துறை சார்பில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.
‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற அடிப்படையில் காசி தமிழ்ச் சங்கமத்தைத் தொடர்ந்து சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை மத்திய அரசு நடத்துகிறது.
கடந்த ஏப்ரல் 17ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இதனைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டார்.
சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு மதுரை – குஜராத் மாநிலம் துவாரகா இடையே சிறப்பு ரயில் இன்று முதல் 11 நாட்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தை முன்னிட்டு கைவினைப்பொருட்கள் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜவுளித்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 19) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “
தமிழகத்தின் 47 நகரங்களில் வசிக்கும் 13 லட்சம் சௌராஷ்டிர மக்கள், குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஆவர். 400 ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்புற படையெடுப்புகளின் காரணமாகச் சௌராஷ்டிர மக்கள், தமிழ் நாட்டின் மதுரை மற்றும் இதர நகரங்களுக்குப் பெருமளவில் குடி பெயர்ந்ததாக வரலாறு கூறுகிறது. சௌராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு இடையே உள்ள பழமையான உறவு மற்றும் கலாச்சார இணைப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு 2023, ஏப்ரல் மாதத்தில் சோம்நாத், துவாரகா மற்றும் ஒற்றுமை சிலை அருகே பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவதே சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின் நோக்கமாகும்.
மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் சார்பாகத் தமிழ் நாடு மற்றும் குஜராத் மாநிலங்களின் பிரத்தியேக கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களின் கண்காட்சி சோம்நாத் மற்றும் துவாரகாவில் நடைபெறுகிறது. ஜவுளித் துறையுடன் சம்பந்தப்பட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக ஏப்ரல் 21 மற்றும் 22-ஆம் தேதிகளில் ராஜ்கோட்டில் ஜவுளித் தொழில்துறையின் பங்குதாரர்களுடன் சிந்தனை முகாம் ஒன்றையும் அமைச்சகம் நடத்துகிறது.
ஜவுளி அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களின் ஆதரவுடன் மத்திய அரசு மற்றும் குஜராத் மாநில அரசின் ஒருங்கிணைப்போடு நடைபெறும் “சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமத்தின்” ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்: பாஜக கண்டனம்!
எடப்பாடிக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு!