holiday for central government offices
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
இந்த விழாவுக்கான பூஜைகள் இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. நேற்று பால ராமர் விக்ரக ஊர்வலம் நடைபெற்றது.
ராமர் கோயில் திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் உட்பட 7,000 பேர் கலந்துகொள்ள இருப்பதாகவும், 55 நாடுகளில் இருந்து 100 உயரதிகாரிகள் வரவுள்ளதாகவும் உத்தரப் பிரதேச அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. இன்று (ஜனவரி 18) பிரதமர் மோடி, ராமர் கோயில் நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டார்.
ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய அஞ்சல் தலைகளை அறிமுகப்படுத்தினார்.
இந்தநிலையில் ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அரை நாள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் துணை செயலாளர் பர்வீன் ஜர்கர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“வரும் ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
மத்திய அரசுப் பணியாளர்கள் இந்த கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வகையில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், மத்திய நிறுவனங்கள் மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களுக்கு 22ஆம் தேதி மதியம் 2.30 மணி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து கூறுகையில்,
“ஊழியர்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அளிக்கப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய திமுக எம்எல்ஏ குடும்பம்? : நடந்தது என்ன?
மோடி வருகை: சென்னையில் எந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்?
holiday for central government offices