திருப்பதி லட்டுவில் குட்கா… தேவஸ்தானம் விசாரணை!

Published On:

| By Kavi

திருப்பதி லட்டுவில் விலங்குகள் கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தற்போது லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டுவில் மாட்டுக் கொழுப்பு, பன்றி கொழுப்பு, மீன் எண்ணெய் ஆகியவற்றை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ஆட்சியில் கலந்துள்ளனர் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார்.

இந்த தோஷத்தை போக்க கோயிலில் சிறப்பு பூஜை நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருந்த நிலையில் நேற்று மகா சாந்தி யாகம் நடத்தப்பட்டது. இனி தயக்கமின்றி பக்தர்கள் கோயிலுக்கு வரலாம் என்று நேற்று தேவஸ்தானம் அறிவித்தது.

இந்த சூழலில் அடுத்த சர்ச்சையாக லட்டுக்குள் குட்கா பாக்கெட் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த டோந்து பத்மாவதி என்ற பக்தர், கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திருப்பதிக்கு சென்ற போது வாங்கிய லட்டுவில் புகையிலை இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், “எனது நண்பர்களுடன்  திருப்பதிக்கு சென்றேன். அலிப்பிரியில் இருந்து கோயிலுக்கு மலையேறும் படிகட்டுகளில் சிகரெட் துண்டுகள் எல்லாம் கிடந்தன. இதைவிட அதிர்ச்சியாக லட்டுவுக்குள் ஒரு சிறிய காகிதத்தில் சுற்றப்பட்ட புகையிலை துண்டுகள் இருந்தது. புனிதமான பிரசாதம் இப்படி மாசடைந்திருப்பதை பார்த்து என இதயமே நொருங்கிவிட்டது” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

மற்றொரு வீடியோவில் லட்டுவுக்குள் சிறிய சிறிய பாக்கெட்டுகள் இருப்பது பதிவாகியிருப்பது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்த தேவஸ்தான குழு கம்மம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. .

கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) தரக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை வேண்டும் என்று திருப்பதி பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்தநிலையில் திருப்பதி தேவஸ்தான அலுவலகம் முன் மடாதிபதிகள் மற்றும் இந்து அமைப்பினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

திருமலையை காப்பாற்றுங்கள், திருப்பதி தேவஸ்தானத்தை காப்பாற்றுங்கள் என முழக்கம் எழுப்பியவாறு லட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தும் நெய்யில் கலப்படம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்களிடம் தேவஸ்தான அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

பிரியா

தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்… அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

10 மாதங்களுக்கு பிறகு துரை தயாநிதி டிஸ்சார்ஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share