6 வயது சிறுமியை நம்பி காரில் அனுப்பிய தாய்… தலைமை ஆசிரியர் உருவில் இருந்த கயவன்!

Published On:

| By Kumaresan M

குஜராத் மாநிலம், தஹோட் மாவட்டத்தில் உள்ள டோரனி என்ற கிராமத்திலுள்ள தொடக்க பள்ளியில்  தலைமை ஆசிரியராக கோவிந்த் நாத் என்பவர் பணியாற்றுகிறார். இவர் பள்ளிக்கு காரில் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கு இவர் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது,  அதே பள்ளியில் ஒன்றாவது வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியின் தாயார் காரை மறித்துள்ளார். பின்னர், தலைமை ஆசிரியருடன் மகளை  காரில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பள்ளி முடிந்த பிறகு மாணவி வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பள்ளி முதல்வரிடம் விசாரித்த போது மாணவியை தான் பள்ளியில் விட்டு விட்டதாக கூறியுள்ளார். இந்நிலையில் பள்ளிக்கு பின்புறம் மாணவி இறந்த நிலையில் கிடந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  சிறுமியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, பள்ளி முதல்வர் கோவிந்த் நாத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளியில் இருந்து 5 மணிக்கு தான்  சென்றுவிட்டதாக கோவிந்த் நாத் கூறினார். ஆனால் அவரது மொபைல் போன் சிக்னல் மாலை 6.10 மணி வரை பள்ளியில் இருந்ததை காட்டியுள்ளது. அன்றைய தினம் அந்த மாணவி பள்ளிக்கு வரவும் இல்லை.

ஒரு கட்டத்தில் தலைமை ஆசிரியரிடத்தில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.  அப்போது, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது.

மாணவியை காரில் கோவிந்த் நாத் அழைத்து வரும் போது பாலியல் வன்கொடுமை செய்ய முயலவே அவர் கூச்சலிட்டுள்ளார். இதனால்,  பயந்து போன கோவிந்த் நாத் காரிலேயே மாணவியை மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து,  பள்ளிக்கும் மாணவியின் சடலத்துடன் வந்துள்ளார்.  பள்ளி முடிந்த பிறகு யாரும் இல்லாத நேரத்தில் மாணவியின் உடலை பள்ளிக்கு பின்புறம் போட்டு விட்டு சென்றுள்ளார்.

இந்த  அதிர்ச்சி சம்பவத்தையடுத்து, போலீசார் அந்த தலைமை ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மனைவி பட்ட வேதனை… தாங்க முடியாத 90 வயது கணவர் செய்த காரியம்… கண்ணீரில் மூழ்கிய கன்னியாகுமரி

தகுதி இழப்புக்கு பிரதமர் காரணமா? வினேஷ் மீது பாயும் யோகேஷ்வர் தத்

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share