குஜராத் மாநிலம் ஆம்ரேலி பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் போலரா. இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மாருதி வேகன் ஆர் ரக ஒன்றை கார் வாங்கியுள்ளார்.
இந்த கார் வீட்டுக்கு வந்த பிறகு, சஞ்சய் போலராவின் வாழ்க்கை மாறிப் போனது. தொட்டதெல்லாம் பொன் என்பது போல கை வைத்த பிசினஸ் எல்லாவற்றிலும் லாபம் கொட்டியது. இந்த கார் வந்த அதிர்ஷ்டத்தால்தான் தனது வாழ்க்கை தரம் உயர்ந்ததாக சஞ்சய் போலரா கருதினார்.
இதனால், இந்த காரை யாருக்கும் விற்க அவருக்கு மனம் வரவில்லை. கார் வாங்கி 15 ஆண்டுகள் ஆகி விட்டதால், அதை ஓரமாகவும் நிறுத்தி வைக்க விரும்பவில்லை. இதனால், அந்த காரை நல்லபடியாக அடக்கம் செய்ய கருதினார். தொடர்ந்து, அந்த கார் அலங்கரிக்கப்பட்டு அவருடைய விவசாய நிலத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக காருக்கு சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன.
காரை நல்லடக்கம் செய்யும் நிகழ்வுக்கு 1,500 உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கிராம மக்களும் உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர், அந்த கார் மீது பச்சை வண்ண துணி போர்த்தப்பட்டு பள்ளத்துக்குள் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. காரை அடக்கம் செய்யும் நிகழ்வுக்கு மட்டும் 4 லட்ச ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சஞ்சய் போலரா கூறுகையில், ‘இந்த கார் வந்த பிறகுதான் எங்கள் குடும்பம் வளர்ச்சியை நோக்கி சென்றது. எனக்கும் என் குடும்பத்துக்கும் ஊருக்குள் மரியாதை ஏற்பட்டது. இதனால், அதனை அமைதியாக அடக்கம் செய்ய முடிவு செய்தேன். இந்த கார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மேல் மரம் வளர்க்கப்படும். மரத்தின் கீழ் அமைதியாக எனது கார் ஓய்வெடுக்கும் ‘என்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாராஷ்டிரா தேர்தல் : பிரச்சாரத்தில் சாதி பெயர்களை பட்டியலிட்ட மோடி
30 நிமிடங்களுக்கு மேல் மின் தடங்கல்… அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!
அந்த காராலதான் அதிஸ்டம் வந்துச்சுனு சொல்ற, அப்ப வீட்டு உள்ளேயோ, வாசல்லயோ காரை நிப்பாட்டி சுத்தி கண்ணாடி தகடு அடிச்சி எல்லாரும் பாக்கற மாதிரி வைக்கலாமே, அத விட்டுட்டு குழி தோண்டி புதைக்கறயே, அவ்ளோ புத்திசாலியா நீயி?