ஒவ்வொரு வீட்டுக்கும் இலவச சிலிண்டர்கள்: குஜராத் அரசின் தீபாவளி பரிசு!

Published On:

| By Kavi

குஜராத்தில் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அவரது அரசில் கல்வித்துறை அமைச்சரான ஜித்து வகானி, “38 லட்சம் இல்லத்தரசிகளை மனதில் கொண்டு குஜராத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆண்டுக்கு தலா இரண்டு இலவச கியாஸ் சிலிண்டர்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

இதேபோன்று, சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை வாயு மற்றும் பைப் வழியே கொண்டு செல்லப்படும் பிஎன்ஜி எனப்படும் இயற்கை வாயு  ஆகியவற்றுக்கு 10 சதவிகித வாட் வரியையும் குறைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த வரி குறைப்பினால், சிஎன்ஜியில் கிலோ ஒன்றுக்கு ரூ.6 முதல் ரூ.7 வரை மக்களுக்கு லாபம் கிடைக்கும்.

பிஎன்ஜியை எடுத்துக்கொண்டால், கிலோ ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.5.50 லாபம் கிடைக்கும். இது மக்களுக்கு அரசு அளிக்கும் தீபாவளி பரிசு என்றும் அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், நடைபெற உள்ள குஜராத் சட்டசபை தேர்தலில் இந்த முறை பாஜக மற்றும் காங்கிரஸுடன்,

ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் மோத தயார் நிலையில் உள்ளது. இதன்படி, ஐந்தாவது வேட்பாளர் பட்டியலையும் ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது. குஜராத் தேர்தலுக்கு இதுவரை 53 வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்து உள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது போன்று, குஜராத்திலும் அதிகாரத்துக்கு வருவதற்கான வேலைகளில் ஆம்ஆத்மி தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் குஜராத்தின் பாஜக அரசு தீபாவளியை முன்னிட்டு இலவச சிலிண்டர்கள் திட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜ்

அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ் போட்ட கன்டிஷன்!

காங்கிரஸுக்கு நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும்: கார்த்தி சிதம்பரம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel