டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரை செய்துள்ளார் என்ற செய்திக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிகின் கட்கரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
கார்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் என வெவ்வேறு வரி விகிதங்களில் செயல்படுத்தப்படுகிறது. பொதுவாக டீசல் மூலம் இயக்கப்படும் மோட்டார் வாகனங்களுக்கு 18 சதவிகிதம் வரி விதிக்கப்படுகிறது.
இந்த நிலையில் டீசல் வாகனங்களினால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்க ஜிஎஸ்டி வரியை அதிகரிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பரிந்துரைத்துள்ளார் என்றும்,
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரி, “2014ஆம் ஆண்டுக்குப் பிறகு 52 சதவிகிதமாக இருந்த டீசல் வாகனங்கள் தற்போது 18 சதவிகிதமாக குறைந்துள்ளது.
ஆட்டோமொபைல் துறை இப்போது வளர்ந்து வருவதால் டீசல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது. டீசல் வாகனங்கள் அதிக மாசுபாட்டை ஏற்படுத்துவதால் அவற்றின் உற்பத்தி குறைக்கப்பட வேண்டும்.
எனவே டீசல் கார்களுக்கு மாசுபாட்டு வரியாக 10 சதவிகிதம் கூடுதல் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என்று நிதியமைச்சருக்கு நான் பரிந்துரைத்து இருக்கிறேன்” என்று கூறியுள்ளார் என்கிற தகவலும் வெளியானது.
இந்த செய்தி வைரலாக பரவிய நிலையில், நிதின் கட்கரி விளக்கம் அளித்துள்ளார். டீசல் வாகனங்கள் விற்பனைக்கு கூடுதலாக 10 சதவிகிதம் ஜிஎஸ்டி விதிப்பது தொடர்பான எந்த முன்மொழிவும் தற்போது அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்று அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “2070ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்கும் இலக்கை எட்டுவதற்கும், டீசல் போன்ற அபாயகரமான எரிபொருட்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் அளவைக் குறைப்பதற்கும், தூய்மையான மற்றும் பசுமையான மாற்று எரிபொருளை ஏற்றுக்கொள்வது அவசியம். இந்த எரிபொருட்கள் இறக்குமதியாகவும், செலவு குறைந்ததாகவும், உள்நாட்டு தயாரிப்பாகவும் மற்றும் மாசு இல்லாததாகவும் இருக்க வேண்டும்” என்று கட்கரி கூறியுள்ளார்.
ராஜ்
தமிழகத்தில் அரசு சார்பில் 100 கண் சிகிச்சை மையங்கள்!
உதயநிதி ஸ்டாலின் மீது மும்பையில் வழக்கு பதிவு!