அரையாண்டு தேர்வு முடிந்து வீட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு வித்தியாசமாக ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த கிரில்டு கார்ன். சோளத்தில், அனைத்து வகையான நுண் ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. இதயத்துக்கான நல்ல உணவு. நார்ச்சத்து உள்ளது. நினைவுத் திறனை அதிகப்படுத்தும்.
என்ன தேவை?
சோளம் – ஒன்று
எண்ணெய், எலுமிச்சைச்சாறு – தலா கால் டீஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள் – தேவையான அளவு
இஞ்சி – சிறிதளவு ( துருவியது).
எப்படிச் செய்வது?
தவாவை மிதமான தீயில் வைக்க வேண்டும். தவாவில் எண்ணெய் ஊற்றி, உதிர்த்த சோள முத்துகளை போட்டு பொன்னிறமாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்க வேண்டும். அதில் இஞ்சி, மிளகுத்தூள், உப்பு, எலுமிச்சைச்சாறு அனைத்தையும் போட்டுக் கிளறி பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சைனீஸ் ஸ்பிரிங் ரோல்!
சண்டே ஸ்பெஷல்: ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்!