பாட்டி மீது அலாதி பாசம்… அமெரிக்காவில் இருந்து ரத்தன் டாடா இந்தியா திரும்பிய பின்னணி!

Published On:

| By Kumaresan M

டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, 86 வயதில் காலமானார். மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று இரவு அவரது உயிர் பிரிந்தது. உலகத் தலைவர்கள், தொழிலதிபர்கள், செலிபிரட்டிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரத்தன் டாடாவுக்கு ஒரு சகோதரர் உண்டு . அவரின் பெயர் ஜிம்மி டாடா.

ரத்தன் டாடாவுக்கு 10 வயது இருக்கும் போது, பெற்றோர் பிரிந்து விட்டனார். இதனால், பாட்டி நவஜ்பாய்தான் சகோதரர்கள் இருவரையும் வளர்த்தார். தனது 17 வயதில்  ரத்தன் டாடா அமெரிக்காவுக்கு படிக்க சென்று விட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கியிருந்தார். அந்த நகரமும் பிடித்து விட  அங்கேயே, வேலையும் கிடைத்துவிட அமெரிக்காவிலேயே வாழ ரத்தன் டாடா முடிவெடுத்தார்.

கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தார். ஆனால், அவரை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமாகி விட ரத்தன் டாடா இந்தியா திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இது குறித்து ரத்தன் டாடா கடந்த 2000 ஆம் ஆண்டு பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ”எனக்கு அமெரிக்காவில்  நல்ல வேலை கிடைத்தது. அங்கேயே வாழவும் ஆசையாக இருந்தது. இப்போதும், அமெரிக்காவை நான் நேசிக்கிறேன்.

ஆனால், என்னை வளர்த்த பாட்டியின் உடல் நிலை மோசமாக இருந்த போது, என்னிடம் போன் செய்து தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும் உன்னை பார்க்க ஆசைப்படுகிறேன் என்றும் என்னிடத்தில் உருக்கத்துடன் பேசினார்.  நமது ஆசை என்னவாக இருந்தாலும் தனிப்பட்ட பிரச்னைகள் நமது வாழ்க்கையை மாற்றி விடும். பாட்டி என்னை அழைத்ததால் நான் மீண்டும் இந்தியா திரும்பினேன் என்று கூறியிருந்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 இன்று காலை வரை முரசொலிக்கு கட்டுரை எழுதிய முரசொலி செல்வம் : ஸ்டாலின் உருக்கம்!

ரத்தன் டாடா மறைவு: எனக்கு மிகவும் பிடித்த G.O.A.T. நீங்கள்…” அனுபம் கெர் உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share