போலி மருந்து தயாரிப்பு: 18 நிறுவனங்களின் உரிமம் ரத்து!
போலி மருந்து உற்பத்தி செய்த 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில், இந்தியாவைச் சேர்ந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளின் தரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து, 203 நிறுவனங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் நடந்தன.
இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவை (70), அதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் (45) மற்றும் மத்தியப் பிரதேசம் (23) உள்ளன.
அவற்றில் 76 மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து 18 மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்து இந்திய மருந்து கட்டுப்பாடு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாட்டைச் சேர்ந்த குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்து கண் சொட்டு மருந்து, அமெரிக்காவில் பார்வை இழப்புடன் தொடர்புடையதாகக் கூறப்பட்டு மொத்த மருந்துகளையும் திரும்பப் பெற்றது. அதற்கு முன், கடந்த ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறப்புடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் சிரப்கள் தொடர்புடையதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
நடிகரை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்த பிரபல நடிகை!