நேரு குடும்பத்திற்கு சொந்தமான ராஜீவ் காந்தி அறக்கட்டளை, வெளிநாட்டு நிதியுதவி சட்டத்தை மீறியதாக கூறி அதன் உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
ராஜீவ்காந்தி அறக்கட்டளையின் தலைவராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளார்.
இந்த அறக்கட்டளையில் பொருளாளர் குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா ஆகியோர் உள்ளனர்.
1991-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ராஜீவ் காந்தி அறக்கட்டளை ஊனமுற்றோர், குழந்தைகள், பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 2010-ஆம் ஆண்டு முதல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு கல்வி பெற உதவி வருகிறது.
2020-ஆம் ஆண்டு வெளிநாட்டு நிதியுதவி சட்டத்தை மீறியதாக அமலாக்கத்துறை ராஜீவ் காந்தி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
செல்வம்
சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ் படங்கள்!
சென்னையில் தொழில்முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்: தமிழக அரசு அறிவிப்பு!