ப்ளஸ் 2-வில் 75 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் கல்வி கட்டணம் இலவசம்!

இந்தியா

ப்ளஸ் 2 அரசு தேர்வில் 75 சதவிகிதம் மதிப்பெண் எடுத்தால் மருத்துவம், பொறியியல், வழக்கறிஞர் படிக்க கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

“மத்தியப் பிரதேச மாநிலத்தில் ப்ளஸ் 2 மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்ணுக்கு அதிகமாக மதிப்பெண் எடுத்தால்,

நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உள்ளவர்கள், ஜேஇஇ தேர்வில் வெற்றி பெற்று ஐஐடியில் படிக்க உள்ளவர்கள்,

பொறியியல் படிப்பு படிக்க உள்ளவர்கள், சட்டக்கல்லூரியில் படிக்க உள்ள மாணவர்கள் ஆகிய படிப்புகளுக்குக் கட்டணத்தை இனி அரசே செலுத்தும்” என மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே மத்தியப் பிரதேச அரசு ப்ளஸ் 2 தேர்வுகளில் 75 சதவிகிதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்குகிறது.

இது தவிர, 110 கிராமங்களில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் 10 லட்சம் புதிய அரசுப் பணிகளையும் தொடங்கியுள்ளது மற்றும் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் அறிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

-ராஜ்

2025 வரையில் குத்தகைக்கு விடப்பட்ட சென்னை உள்ளிட்ட தமிழக விமான நிலையங்கள்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *