google reveals top 10 tourist places

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்கள் இதோ!

இந்தியா

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நபர்கள், திரைப்படங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற விவரங்களை வெளியிடும். google reveals top 10 tourist places

அந்தவகையில் இந்தியர்களால் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலா தலங்களை கூகுள் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்…

வியட்நாம்

சுற்றுலா பயணிகளுக்கு எளிதில் செல்ல உகந்த நாடாக வியட்நாம் உள்ளது. இங்குள்ள உணவுகள் மற்றும் இடங்கள் பயணிகளை வெகுவாக கவர்கிறது. மற்ற நாடுகளை காட்டிலும் வியட்நாம், பயணிகளுக்கு பாதுகாப்பானதாகவும், எளிதில் பயணிப்பதற்கு வசதியாகவும் உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரை இங்கு அதிகளவில் சுற்றுலா செல்கிறார்கள்.

கோவா

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைகள், இரவு விருந்துகள், பழமையான கட்டிடங்கள் ஆகியவை புகழ்பெற்றவை. இதனால் இந்தியர்கள் பலருக்கும் கோவா செல்வது விருப்பமான தேர்வாக உள்ளது.

google reveals top 10 tourist places

பளி   

இந்தோனேசியாவில் உள்ள மாகாணம் பளி. இங்கு இயற்கை சூழல் மிகுந்திருப்பதால் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பளி பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகள் பலரும் விரும்புகின்றனர்.

இலங்கை

தேயிலை உற்பத்தியில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு டச்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள், பழமையான அருங்காட்சியகங்கள், ஹியாரே மழைக்காடு போன்றவை சுற்றுலா செல்ல உகந்த இடமாக உள்ளது. கடும் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கை அரசு சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

google reveals top 10 tourist places

தாய்லாந்து

இங்குள்ள கடற்கரைகள் மற்றும் காடுகள் புகழ்பெற்றவை. இந்திய பயணிகள் விசா இல்லமல் தாய்லாந்து செல்ல அந்நாட்டின் சுற்றுலாத்துறை அனுமதியளித்துள்ளது.

காஷ்மீர்

கடும் பனியால் குளிர் வாட்டி எடுக்கும் காஷ்மீரில் உறைந்த ஏரிகள், படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இங்குள்ள ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், பகல்ஹாம், புல்வாமா பகுதிகளுக்கு அதிகளவில் பயணிக்கின்றனர்.

கூர்க்

கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகள், கோட்டை, ஏரிகள், அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பலரும் ட்ரெக்கிங் செல்கின்றனர்.

அந்தமான், நிகோபர் தீவுகள்

இங்குள்ள ராதாநகர் கடற்கரை, செல்லுலார் ஜெயில், ரோஸ் தீவு, யானை கடற்கரை, கலப்பத்தூர் கடற்கரை போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

இத்தாலி

இத்தாலியில் பாரம்பரியமான உணவு வகைகள், பழைமையான கட்டிடங்கள், வெனிஸ், ரோம், வாடிகன் சிட்டி போன்ற நகரங்களுக்கு செல்வது சுற்றுலா பயணிகளின் முதன்மையான தேர்வாக உள்ளது.

சுவிட்சர்லாந்து

இங்குள்ள ஜெனிவா, பாசல், கிரிண்டில்வார்ட் போன்ற மலைப்பகுதிகளுக்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு

அமைச்சர்கள் மீதான சூமோட்டோ வழக்கு : உயர் நீதிமன்றம் கேள்வி!

google reveals top 10 tourist places

+1
1
+1
4
+1
2
+1
7
+1
1
+1
3
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *