ஒடிசா மாநிலம் பர்கார் மாவட்டத்தில் இன்று (ஜூன் 5) சரக்கு ரயில் தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கடந்த ஜூன் 2-ஆம் தேதி ஒடிசா பாலசோரில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த ரயில் விபத்து உலகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் விபத்து நடைபெற்ற இருப்பு பாதைகள் முழுமையாக சீரமைக்கப்பட்டு நேற்று இரவு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று பயணிகள் ரயில் சேவை இயக்கப்பட்டது.
இந்தநிலையில் விபத்து நடைபெற்ற பாலசோரில் இருந்து 500 கி.மீ தொலைவிலுள்ள மேதாபள்ளி பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது.
இதுகுறித்து கிழக்கு ரயில்வே தரப்பில் கூறும்போது, “ஒடிசா மாநிலம் பர்கார் பகுதியிலிருந்து மேதாபள்ளிக்கு தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு ரயிலில் சுண்ணாம்புக்கல் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயிலின் ஐந்து பெட்டிகள் மேதாபள்ளியில் தடம் புரண்டுள்ளது. சரக்கு ரயிலின் இன்ஜின், பெட்டிகள், ரயில் பாதைகள் என அனைத்து உள்கட்டமைப்புகளும் தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படுகிறது. இந்திய ரயில்வேக்கு இதில் தொடர்பில்லை” என்று தெரிவித்துள்ளது.
சரக்கு ரயில் தடம் புரண்டதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
செல்வம்
வெயில் தாக்கம்: பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்!
ஒடிசா ரயில் விபத்து: பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்!