சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாகத் தங்கம் விலை உயர்ந்து இன்று (ஆகஸ்ட் 26) ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 38,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னையில் கடந்த சில தினங்களாகவே உயர்வைச் சந்தித்து வந்த தங்கம் விலை, தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 26) உயர்ந்துள்ளது.
ஆபரணத் தங்கம் நேற்று (ஆகஸ்ட் 25) ரூ. 38,640-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 80 உயர்ந்து ரூ. 38,720-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 10 உயர்ந்து ரூ. 4,840-க்கு விற்கப்படுகிறது.
நேற்று வெள்ளி ஒரு சவரன் ரூ. 488.80-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று சவரனுக்கு ரூ. 1.40 உயர்ந்து ரூ. 490.40-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ரூ. 61.30-க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி காலகட்டத்தில் தங்கம் விலை 39 ஆயிரம் ரூபாயை கடந்து விற்பனையான நிலையில் சமீப நாட்களாக விலை குறைந்து 39 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது.
மோனிஷா