சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை குறைந்திருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 2) அதிரடியாக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி, தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 25ரூபாயும், சவரனுக்கு 200 ரூபாயும் அதிகரித்துள்ளது.
அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,820 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 38,560 ஆகவும் உள்ளது. அதேபோன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து கிராம் ரூ.63.60 ஆகவும் கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.63,600 ஆகவும் விற்பனையாகிறது.
நேற்று 160 ரூபாய் குறைந்திருந்த நிலையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரேயடியாகச் சவரனுக்கு ரூ, 200 உயர்ந்து இருக்கிறது. கடந்த ஜூலை 28ஆம் தேதி முதல் 38,000 ரூபாயைக் கடந்து தங்கம் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
கலை