தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இன்று ரூ. 16 அதிகரித்துள்ளது.
கொரோனா பரவலைத் தொடர்ந்து உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் உலக நாடுகள் பலவும் பொருளாதார சரிவைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலிருந்து விலகி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்தது. மே, ஜூன் மாதங்களில் 107 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. தங்கம் இறக்குமதி அதிகரிப்பால் சுங்க வரியை 10.75 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக நிதியமைச்சகம் அதிகரித்தது. அதோடு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.
இதன் காரணமாக நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் நேற்று 4,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 16ரூபாய் உயர்ந்து 4,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் கொண்ட ஒரு பவுன் தங்கம் 37,440 ரூபாயிலிருந்து 128 ரூபாய் அதிகரித்து 37,568 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று 8 கிராம் கொண்ட 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை இன்றைய நிலவரப்படி ரூ. 40,984ஆக உள்ளது.
வெள்ளியின் விலை 40பைசா குறைந்து ஒருகிராம் ரூ.61.20க்கும், ஒரு கிலோ ரூ.61,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரியா