வீடியோ பார்த்துக் கொண்டிருந்த போது செல்போன் வெடித்ததில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் பட்டிப்பறம்பு என்ற இடத்தில் முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் அசோக் குமார் என்பவரின் மகள் ஆதித்யா ஶ்ரீ (8).
சிறுமி ஆதித்யா ஸ்ரீ அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய தாய் கூட்டுறவு வங்கியின் இயக்குநராக பணியாற்றி வருகிறார்.
ஆதித்யா ஸ்ரீ அதிகமாக செல்போனில் வீடியோ பார்க்கும் பழக்கம் உள்ளவராக இருந்துள்ளார். அந்த வகையில், சிறுமி நேற்று (ஏப்ரல் 24) இரவு 10.30 மணியளவில் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் சிறுமி ஆதித்யா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பாசயனூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வெடித்த செல்போனை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
8 வயது சிறுமி செல்போன் வெடித்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
குட்கா வழக்கு: கிடங்குக்கு சீல் – மனு தள்ளுபடி!
வி.பி.ராமன் சாலை பெயர் பலகையை திறந்து வைத்தார் முதல்வர்