அண்மையில் வெளியான உலக பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் அதானி குழுமத்தின் தலைவருமான கெளதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதன் மூலம் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் டெஸ்லா நிறுவனர் எலன் மாஸ்க்கிற்கு அடுத்த படியாக அதானி இருந்து வந்தார்.
இந்நிலையில், ப்ளூம்பெர்க் பில்லியனர் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின் படி 135 பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.10.98 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் அதானி தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அமேசான் நிறுவனர் ஜெப் பேசோஸ் 138 பில்லியன் டாலருடன் (ரூ. 11.23 லட்சம் கோடி) இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 245 பில்லியன் டாலருடன் (ரூ. 19.93 லட்சம் கோடி) எலன் மாஸ்க் தொடர்ந்து இந்த பட்டியலில் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய தொழிலதிபரான ரிலையன்ஸ் தலைவர் அம்பானியை பின்னுக்கு தள்ளி ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக கெளதம் அதானி உருவெடுத்தார். பின்னர் ,ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்குத்தள்ளி உலகின் நான்காவது பணக்காரர் ஆனார் அதானி.
கடந்த வாரம் முதல் முறையாக உலகப்பணக்காரர்கள் பட்டியலில் 2 வது இடத்துக்கு முன்னேறி இருந்தார்.
இவரது ஒரு நாள் வருமானம் 1,600 கோடிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு: மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு!
வாட்ஸ் அப் வீடியோ கால் : சூப்பர் அப்டேட் கொடுத்த ஜூக்கர்பெர்க்