ஹிண்டன்பர்க் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 3) வழங்கிய தீர்ப்பினை தொடர்ந்து ‘உண்மை வென்றது’ என கெளதம் அதானி தெரிவித்துள்ளார்
அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண்டன்பர்க்’ ஆய்வு நிறுவனம், அதானி குழுமத்தின் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகள் அடங்கிய அறிக்கையை கடந்த ஆண்டு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியது.
ஹிண்டன்பர்க் அறிக்கையின்படி அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில் ”அதானி குழும முறைகேடு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தேவையில்லை. செபியின் விசாரணை மட்டுமே போதுமானது” என்று உத்தரவிட்டது.
மேலும், “மொத்தம் கூறப்பட்ட 22 முறைகேடு புகார்களில் இதுவரை 20க்கான விசாரணையை செபி முடித்துள்ளது. சொலிசிட்டர் ஜெனரலின் உத்தரவாதத்தை ஏற்று, மீதமுள்ள இரண்டு வழக்குகளின் விசாரணையை மூன்று மாதங்களுக்குள் செபி முடிக்க வேண்டும்” என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
செபியின் விசாரணையை ஏற்று, தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதில், “மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மை வென்றுவிட்டது என்பதை காட்டுகிறது. சத்யமேவ ஜெயதே.
எங்களுடன் துணை நின்றவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தியாவின் வளர்ச்சிக் கதைக்கு எங்களது பங்களிப்பு தொடரும். ஜெய் ஹிந்த்.” என்று அதானி தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை தொடர்ந்து அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்குகள் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
GOAT: 23 ஆண்டுகளுக்கு பிறகு இளையராஜாவுடன் இணையும் விஜய்
திடீர் மாற்றம்: புத்தகக் காட்சியை துவக்கி வைக்கும் அமைச்சர் உதயநிதி
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அவகாசம்!