ஞாயிற்றுக்கிழமையும் சிலிண்டர்களை சப்ளை செய்ய வேண்டும் என இண்டேன் ஏஜென்சிகளுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விநியோகத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் (ஐஓசிஎல்), பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதில், மிக அதிகபடியான வாடிக்கையாளர்களை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம், இண்டேன் என்னும் காஸ் சிலிண்டரை சப்ளை செய்து வருகிறது.
வாடிக்கையாளர்களான மக்கள், சிலிண்டர் புக்கிங் செய்த இரண்டு, மூன்று நாட்களுக்குள் இண்டேன் சிலிண்டரை அதன் ஏஜென்சிகள் சப்ளை செய்கிறது. கிராமப்புற பகுதிகளில் சிலிண்டர் சப்ளைக்கு நான்கு, ஐந்து நாட்கள் ஆகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாக சப்ளை செய்யும் காலக்கெடுவை குறைத்திட இந்தியன் ஆயில் நிறுவனம் ஏஜென்சிகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.
நகரப்பகுதிகளில் உள்ள இண்டேன் காஸ் ஏஜென்சிகள், இந்த உத்தரவை பின்பற்றி ஒரு நாளுக்குள் சிலிண்டர் வழங்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. இதனால், சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் சிலிண்டர் விநியோகம் ஒரு நாள் அல்லது இரண்டு நாளில் இருக்கிறது.
“இதை இன்னும் வேகப்படுத்தி, ஒருநாள் என்ற நிலைக்குள் கொண்டு வர வேண்டும். ஒரு வாடிக்கையாளர் சிலிண்டர் கேட்டு புக்கிங் செய்தால், அடுத்த 24 மணி (ஒரு நாளுக்குள்) நேரத்துக்குள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையிலும் வழங்கிட வேண்டும்” என ஐஓசிஎல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
ராஜ்
மதுரை – சிங்கப்பூர்: 22ஆம் தேதி முதல் தினசரி விமான சேவை!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!