இந்தியாவில் மாதம்தோறும் 1ஆம் தேதி சமையல் எரிவாயு விலையை நிர்ணயம் செய்து எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.
அதன்படி பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று சிலிண்டர் விலையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.1,966 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று ரூ.6.50 குறைந்து ரூ. 1959.50 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ரூ.14.50 காசுகள் குறைந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது மாதமாக வணிக சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்துள்ளது.
அதே வேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில், சிலிண்டர் விலை குறைந்துள்ளது வணிகர்களுக்கும், மக்களுக்கும் நிம்மதி அளித்துள்ளது.