வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைவு!

Published On:

| By Kavi

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று (ஜனவரி 1) குறைந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் நிலவரத்தைப் பொறுத்து மாதம்தோறும் சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மாதம்தோறும் 1ஆம் தேதி இதன் விலை மாற்றியமைக்கப்படும்.

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 14 ரூபாய் 50 காசுகள் குறைந்து 1,966 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில மாதங்களாகவே வணிக சிலிண்டர் விலை உயர்ந்து வந்தது.
செப்டம்பர் மாதம் ரூ.38 உயர்ந்து ரூ.1,855க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர், கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ரூ.48 உயர்ந்து ரூ.1,903க்கு விற்பனை ஆனது.

நவம்பர் 1ஆம் தேதி ரூ.61.50 உயர்ந்து ரூ.1,964.50-க்கும், டிசம்பர் 1ஆம் தேதி ரூ.16 உயர்ந்து ரூ.1,980.50க்கு விற்பனை ஆனது.

இந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது வணிகர்களுக்கு சற்று நிம்மதியை தந்துள்ளது.

வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.90-க்கும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.48-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : CBSE-யில் பணி!

ஆட்டம்… பாட்டம்…விழிப்புணர்வு : புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடிய மக்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share