பூண்டு விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதை அடுத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பூண்டு பயிர்கள் திருடு போகாமல் காப்பாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பூண்டின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து காணப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.400 முதல் 500 வரை விற்பனை செய்யப்படுவதால் அதைப் பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆனால், இந்த மகிழ்ச்சியிலும் அவர்கள் துயரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. காரணம் வயல்வெளியில் இருந்து பூண்டு பயிர்கள் திருடு போவதுதான்.
இதிலிருந்து பூண்டு பயிரை பாதுகாக்க விவசாயிகள் புதிய யுக்தியை கையாளுகின்றனர். அதாவது பூண்டு பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பூண்டு விவசாயி ஒருவர், “அண்மையில் எனது வயலில் இருந்து 8 முதல் 10 கிலோ பூண்டுகளை திருடி போலீஸாரிடம் ஒருவர் சிக்கினான். இந்த சம்பவத்திற்குப் பிறகு, நான் எனது வயலை சிசிடிவி கேமராக்களை பொருத்தி பாதுகாத்து வருகிறேன்.
நான் 13 ஏக்கர் நிலத்தில் பூண்டு பயிரிட்டுள்ளேன். அதற்காக மொத்தம் ரூ. 25 லட்சம் செலவு செய்தேன். இதுவரை ரூ.1 கோடி ரூபாய்க்கு பூண்டு விற்பனை செய்துள்ளேன். மேலும் 4 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பூண்டு பயிரைக் கண்காணிக்க மூன்று கேமராக்கள் பொருத்தியுள்ளேன்” என்கிறார்.
மற்றொரு பூண்டு விவசாயி, “எனது வயலைக் கண்காணிக்க மூன்று சிசிடிவி கேமராக்களை நிறுவினேன். இரண்டு கேமராக்கள் என்னுடையது, ஒரு கேமரா வாடகை.
எனது வயல்களில் இருந்து பூண்டுகள் திருடப்பட்டதால் இந்த கேமராக்களை நிறுவ வேண்டியிருந்தது. அதைத் தொடர்ந்து நான்கு ஏக்கர் பூண்டு பயிரில் ரூ. 4 லட்சம் செலவு செய்து 6 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஜ்
மாசக் கடைசியில பட்ஜெட்:அப்டேட் குமாரு
கலையரசன் நடிக்கும் “ஹாட் ஸ்பாட்”: ஸ்பெஷல் என்ன?
விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்த உதயநிதி
டெல்லி பாஜக மாநாட்டில், அண்ணாமலை தரையில் உட்கார்ந்தாரா… உட்கார வைக்கப்பட்டாரா?