நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களையிழந்த நிலையில் இந்த ஆண்டு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவதுடன் பொது இடங்களிலும், வீடுகளிலும் களிமண்ணில் உருவாக்கப்பட்ட சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவில், “விநாயகர் சதுர்த்தி திருநாளில் கருணை மற்றும் சகோதரத்துவம் எப்போதும் மேலோங்கட்டும். யாரிடமிருந்து தடைகள் அழிகிறதோ, யாரிடமிருந்து காரியம் நிறைவேறுகிறதோ, அந்த விநாயகரை எப்போதும் கும்பிட்டு வணங்குகிறோம்.
விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள். விநாயகரின் அருள் எப்போதும் நமக்கு இருக்கட்டும்.” என பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “ விநாயகர் சதுர்த்தி திருநாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். தடைகள் நீங்கி அனைவருக்கும் ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளைப் பொழிய வேண்டுகிறேன் “ என தெரிவித்துள்ளார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ், அண்ணாமலை என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மோடி மனிதநேயம் மிக்கவர் : குலாம் நபி ஆசாத் பேட்டி!