ஜி20 மாநாடு டெல்லியில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இன்று நடைபெற்ற மாநாட்டில் முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி ஜி20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனங்கள்
வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் செலவைக் குறைப்பதற்கும் தனியார் துறையுடன் இணைந்து பணியாற்ற G20 உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதோ அல்லது அச்சுறுத்துவதோ ஏற்றுக்கொள்ள முடியாதது
G20 உறுப்பினர்கள் வளரும் நாடுகளில் முதலீடு செய்யக்கூடிய திட்டங்களை உருவாக்க தனியார் துறையுடன் இணைந்து பணியாற்றத் தீர்மானித்துள்ளனர்.
பாலின வேறுபாடுகளை அகற்றி பெண்களை சமூகத்தில் முன்னிலைப்படுவதை உறுதியளிக்கிறோம்.
உக்ரைன் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஜி20 உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.
உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆதரிக்கும் அனைத்து தொடர்புடைய, ஆக்கபூர்வமான முயற்சிகளையும் நாங்கள் வரவேற்போம்.
பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை உட்பட சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்த அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம்.
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதம் மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் கண்டிக்கிறோம்
போரினால் ஏற்படும் பாதிப்பை தீர்ப்பதற்கான முயற்சியில் நாங்கள் ஒன்றுபடுவோம்.
செல்வம்
“அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணமிது” – மோடி
எதிர்நீச்சல் : மாரிமுத்துவுக்கு பதில் யார்?