ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உலக நாடுகளின் தலைவர்களுக்கு இன்று (செப்டம்பர் 9) விருந்து அளித்தார்.
ஜி20 மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இன்று துவங்கியது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய பிரகடனங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து மாலை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உலக நாடுகளின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் உலக நாடுகளின் தலைவர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். மேலும் மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களும் இந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விருந்து துவங்குவதற்கு முன்னதாக குடியரசு தலைவர் திரவுபதி முர்வு மற்றும் பிரதமர் மோடியுடன் உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் குடும்பங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். விருந்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பறிமாறப்பட்டது.
விருந்து நிகழ்ச்சியை முன்னிட்டு குடியரசு தலைவர் மாளிகை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இசைக்கச்சேரி நடத்தப்பட்டது.
செல்வம்