காந்தி நினைவிடத்தில் உலக தலைவர்கள் மரியாதை!

இந்தியா

ஜி20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்று, இன்று (செப்டம்பர் 10) மரியாதை செலுத்தினார்கள்.

ஜி20 கூட்டமைப்பின் 18வது உச்சி மாநாடு நேற்று டெல்லியில் தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மெர்கல், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, வங்கதேச பிரதமர் சேக் ஹசீனா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

நேற்று மாநாட்டில் இரு அமர்வுகள் நடந்தன. அதில் பல்வேறு தீர்மானங்கள் அடங்கிய மாநாட்டுக்கான பிரகடனம் ஒருமனதாக உலகத் தலைவர்களால் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு, உலகத்தலைவர்களுக்கு விருந்து அளித்தார்.

இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று காலையிலேயே டெல்லி ராஜபாதையில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலக தலைவர்கள் சென்று மலர் மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து மகாத்மா காந்தியின் பஜனைப் பாடல்களையும் உலக தலைவர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர்.

முன்னதாக அங்கு அமைக்கப்பட்டு இருந்த மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தின் திரைக்கு முன்பாக ஒவ்வொரு தலைவருக்கும் கதர் துணியால் தயாரிக்கப்பட்ட சால்வையை அணிவித்து பிரதமர் மோடி வரவேற்றார்.

கிறிஸ்டோபர் ஜெமா

ஜோ பைடன் – ஸ்டாலின் சந்திப்பு!

சந்திரபாபு நாயுடு கைது: பவன் கல்யாண் சாலையில் படுத்து போராட்டம்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *