ஜப்பானில் ஓடுபாதையில் தரையிறங்கும் போது விமானத்தில் தீப்பிடித்ததால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். fully burned japan airlines
ஜே.ஏ.எல். 516 என்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹொகைடோவிலிருந்து புறப்பட்டு இன்று (ஜனவரி 2) டோக்கியோவில் உள்ள ஹனேடா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
அப்போது தரையிறங்கும் போது ஓடுதளத்தில் இருந்த ஜப்பான் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியது. இதனால் இரண்டு விமானங்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின.
Un avión de la aerolínea Japan Airlines chocó contra una aeronave militar y se incendió en el aeropuerto de Haneda, Tokio.
A bordo del Airbus A350 había 367 pasajeros y 12 tripulantes que fueron evacuadas tras el accidente. Se reportan 5 muertos de la aeronave militar. pic.twitter.com/2cXUBYhNvr— PERÚ PRENSA (@SantillanNotici) January 2, 2024
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் 367 பயணிகள் உட்பட 379 பேரும் கடலோர காவல்படை விமானத்தில் 6 பேரும் இருந்தனர். இதில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 379 பேரும் காற்று நிரப்பப்பட்ட சாய்தளம் (Air-filled ramp) மூலமாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கடலோர காவல்படை விமானத்தில் இருந்து ஒருவர் மட்டும் பத்திரமாக வெளியே வந்த நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே விமான நிலைய ஊழியர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இரு விமானங்களுக்கு தீக்கிரையாகியது.
முழுமையாக தீப்பிடித்து எரிந்த விமானத்தில் இருந்து பயணிகளை அனைவரையும் விரைவாக வெளியேற்றிய விமான குழுவினருக்கு பிரிட்டனில் உள்ள கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து அமைப்புகள் துறையின் இயக்குநர் பேராசிரியர் கிரஹாம் பிரைத்வைட் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “போக்குவரத்து பாதுகாப்பு என்று வரும்போது ஜப்பான் தனித்துவமான சாதனைகளை புரிந்துள்ளது. பயணிகளை வெற்றிகரமாக வெளியேற்றியது, எந்தளவுக்கு விமான குழுவினருக்கு பயிற்சி அளித்துள்ளனர் என்பதை உணர்த்துகிறது.
அவர்களுடைய கவனம் முழுவதும் பயணிகளின் பாதுகாப்பு மீதுதான் இருந்துள்ளது. விமானத்திலிருந்து வெளியேறிய கடைசி நபர்கள் விமான குழுவினர் தான். அவர்கள் நம்பமுடியாத வேலையைச் செய்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
துணைவேந்தர் ஜெகன்நாதன் ஜாமீன் விவகாரம்: சேலம் மாஜிஸ்திரேட்டுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் போராட்டம்!
“வீண் பயிற்சியில் அமலாக்கத் துறை” : கார்த்தி சிதம்பரம்
fully burned japan airlines