புற்றுநோய்களுக்கான மருந்து, தங்கம் பிளாட்டினம் ஆகியவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7-வது முறையாக இன்று (ஜூலை 23) பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதில் வரி குறைப்பை பொறுத்தவரை,
தோல் மற்றும் ஆயத்த ஆடைகளுக்கான வரி குறைக்கப்படும்.
பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4 சதவீதமாக குறைக்கப்படவுள்ளது
அறக்கட்டளைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி விகிதம் 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான 3 மருந்துகளுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மொபைல் போன் மற்றும் சார்ஜர்களுக்கு அடிப்படை இறக்குமதி வரிவிகிதம் குறைக்கப்படும்.
25 முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
லித்தியம், காப்பர், கோபால்ட் ஆகியவற்றுக்கு சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களுக்ககான சுங்க வரி 6 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
முதலீட்டாளர்களுக்கான ‘ஏஞ்சல் வரி’ ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
பட்ஜெட் 2024 : ஆந்திரா, பீகாருக்கு அடித்த ஜாக்பாட்… அதிக நிதி ஒதுக்கீடு!
கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?