‘டைம் 100’ பட்டியலில் இடம்பிடித்த 8 இந்தியர்கள்!

Published On:

| By Manjula

உலகம் முழுவதும் புகழ்பெற்ற பணக்காரர்கள், ஆளுமைகள் என 100 பேர் கொண்ட பட்டியலை டைம் இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம்(நவம்பர் 16) இந்த ஆண்டுக்கான செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இதில் இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பேர் இடம் பிடித்து இருக்கின்றனர்.

இந்த ஆண்டு நவம்பர் 30-ம் தேதி காலநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) நடைபெற இருக்கிறது. இதையொட்டி உலகம் முழுவதும் காலநிலையில் தாக்கத்தை உண்டாக்கும் தொழில்களில் ஈடுபட்டுள்ள 100 வணிக பிரபலங்களை தொகுத்து ‘டைம் 100 கிளைமேட்’ என்ற தலைப்பில் டைம் இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் துணை நிறுவனர் பவிஷ் அகர்வால், அமெரிக்க எரிசக்தி கடன் திட்டங்கள் நிறுவனத்தின் இயக்குனர் ஜிகர் ஷா,  பாஸ்டன் காமென் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனர் கீதா ஐயர், ராக்பெல்லர் அறக்கட்டளையின் தலைவர் ராஜீவ் ஷா (இந்திய  வம்சாவளி – குஜராத் ),  ஹஸ்க் பவர் சிஸ்டம்ஸின் இணை நிறுவனர் மனோஜ் சின்ஹா, கெய்சர் பெர்மனெட் நிறுவனத்தின் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பொறுப்பாளர் சீமா வாத்வா, மஹேந்திரா லைப்ஸ்பேசஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அமித் குமார் என இந்தியா மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 8 பிரபலங்கள் இடம்பெற்று இருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

-மஞ்சுளா 

’ரஜினிகாந்த் தான் என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமி’: வெற்றிவிழாவில் ராகவா லாரன்ஸ் உருக்கம்!

WorldCup2023: உலகக்கோப்பை யாருக்கு? வெற்றியை தீர்மானிக்க போகும் டாப் 5 பிளேயர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel