சபரிமலையில் இதுவரை 26 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ள நிலையில் அங்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும், மாலை அணிந்து விரதமிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு நாளும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதுவரை 26 லட்சம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர்.
சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை நாளை (டிசம்பர் 27) நடக்கிறது. இந்த நிலையில், சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு கட்டணமில்லா வைஃபை சேவையை பிஎஸ்என்எல் மற்றும் தேவசம் போர்டு சார்பில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக சன்னிதானம், நடைப்பந்தல், திருமுற்றம், மாளிகைப்புறத்தில் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இலவச வைஃபை சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: பற்களில் மஞ்சள் கறை… நீக்குவது எப்படி?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: கிரில்டு கார்ன்!
சரிகிறதா ‘சலார்’ வசூல்?… கலெக்ஷன் எவ்வளவு?