இலவச தரிசனத்துக்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக்கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், இலவச தரிசனத்துக்காக பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த இலவச தரிசனத்துக்கான முன்பதிவு டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பக்தர்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருக்காமல் இலவச தரிசனத்துக்கான முன்பதிவு டோக்கன்களை கீழ் திருப்பதியில் உள்ள மூன்று இடங்களில் பெற்றுக்கொள்ள தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.
இலவச டோக்கன்கள் பெற்றுக்கொண்ட பக்தர்கள் குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்குச் சென்றால் ஒன்று முதல் இரண்டு மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ராஜ்
டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்து தோல்வி!
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!