ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கிறது.
இந்நிலையில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1 கோடியே 35 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு இலவச இணைய இணைப்பும் அளிக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு சிம் பயன்படுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் ஒரு சிம் ’ப்ரேமரி ஸ்லாட்டாக’ இருக்கும்.

முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்திற்காக 12 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்துக்கு டெண்டர் நேற்று (ஆகஸ்ட் 19 ) விடப்பட்டது.
இதில் இணைய இணைப்பு அளிப்பதற்கு 3 தொலைத்தொடர்பு நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அவற்றில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளது என்றும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
இலவசங்கள் தொடர்பான விவாதங்கள் நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலமான ராஜஸ்தானில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்