இந்தியாவை திட்டமிட்டு சூறையாடும் அதானி குழுமமானது இந்திய தேசிய கொடியை போர்த்திக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்று ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹிண்டன்பெர்க் ஆராய்ச்சி நிறுவனமானது கடந்த ஜனவரி 24-ஆம் தேதி அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமமானது பங்கு முறைகேடு, வரி ஏய்ப்பு, பங்குகளின் மதிப்பை உயர்த்திக்காட்டி கடன் வாங்கியதாக குறிப்பிட்டிருந்தது.
இதனால் கடந்த ஒரு வாரமாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர் சரிவை சந்தித்து வருகின்றன.

இந்தநிலையில், ஹிண்டன்பெர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் நேற்று 413பக்கங்களில் பதில் அளித்துள்ளது.
அதில், “ஹிண்டன்பெர்க் அறிக்கையானது ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. இந்திய நிறுவனங்களின் சுதந்திரம், ஒருமைப்பாடு, தரம் மற்றும் வளர்ச்சியின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகும்.
முற்றிலும் சுயநல நோக்கங்களுக்காக வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது அந்நிய செலாவணி சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக உள்ளது.
இந்திய கணக்கியல் தரநிலை சட்டங்களின் கீழ் நாங்கள் மேற்கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் எங்களால் முறையாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
நம்பகத்தன்மையில்லாத இந்த அறிக்கையால் எங்களது முதலீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள்மீது அடிப்படை ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள ஹிண்டன்பெர்க், “தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது. இந்தியாவின் எதிர்காலம் அதானி குழுமத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதானி குழுமமானது அதன் அபரிமிதமான வளர்ச்சியை இந்தியாவின் வளர்ச்சியாக மாற்ற முயற்சித்துள்ளது.
இதனை நாங்கள் முற்றிலுமாக மறுக்கிறோம். இந்தியா ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் அற்புதமான எதிர்காலத்துடன் வளர்ந்து வரும் வல்லரசு என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தியாவை திட்டமிட்டு சூறையாடும் அதானி குழுமமானது இந்திய தேசிய கொடியை போர்த்திக்கொண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது.
அதானி குழுமத்திடம் நாங்கள் 88கேள்விகளை முன்வைத்தோம். அதில் 62பதில்களுக்கு அதானி குழுமமானது பதிலளிக்கவில்லை.” என்று தெரிவித்துள்ளது.
செல்வம்
மருத்துவ காலிப்பணியிடங்கள்: ஓபிஎஸ் காட்டம்!
பேருந்து தீ விபத்து: 11 பேர் காயம்!
குஜராதிகாரனால் நாடு வீழ்ச்சியை நோக்கி போகுது, பாரத மாதாக்கி ஜெ சொல்லி எல்லா பயலையும் முட்டாளாக்கிகொண்டிருக்கான்,