குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று (ஜனவரி 25) இந்தியா வந்தார்.
நாடு முழுவதும் நாளை 75வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கொடியேற்ற உள்ளார். மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள நட்பு நாட்டின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஜனவரியில் இந்தியா வர இயலாது என்பதால் ஜோ பைடன் மறுத்துவிட்டார்.
தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு இமானுவேல் மேக்ரான் இன்று இந்தியா வந்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு வந்த இமானுவேல் மேக்ரானை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். தொடர்ந்து பிரான்ஸ் அதிபருக்கு அமர் கோட்டையில் கலை நிகழ்ச்சிகளுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடியுடன் சேர்ந்து ஜந்தர் மந்தர், ஹவா மஹால் உள்ளிட்ட இடங்களை பிரான்ஸ் அதிபர் பார்வையிட உள்ளார்.
தொடர்ந்து நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கலந்து கொள்ள உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
செய்தியாளர் மீது தாக்குதல் : இருவர் கைது!
ரிலீஸுக்கு ரெடியான விஷால்… மீண்டும் பிளாக் பஸ்டர் ஹிட்டா.?