முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் கணவர் தேவ்சிங் ஷெகாவத் இன்று (பிப்ரவரி 24 )காலமானார்.
அவருக்கு வயது 89. இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ” கணவர் மறைவால் வாடும் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். சமூகத்திற்கு பல்வேறு வழிகளில் ஆற்றிய சேவை மூலம் சமூகத்தில் தனி முத்திரை பதித்தவர் ஷெகாவத்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஸ்ரீதேவியின் அறியப்படாத அரிய தகவல்கள்!
ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : தமிழகத்தின் நிலை?
அதிமுக பழனிசாமியின் தாத்தா ஆரம்பித்த கட்சியா?: பன்னீர் தாக்கு!
ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!
Comments are closed.