உடல்நலக்குறைவின் காரணமாக துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் இன்று (பிப்ரவரி 5) உயிரிழந்தார். அவருக்கு வயது 79.
பாகிஸ்தானில் நடைபெற்று வந்த நவாஸ் ஷெரிப் ஆட்சியை ராணுவ புரட்சியின் மூலம் பர்வேஸ் முஷாரப் 1999-ஆம் ஆண்டு கலைத்தார். பின்னர் 1999-ஆம் ஆண்டு முதல் 2008-ஆம் ஆண்டு வரை முஷாரப், பாகிஸ்தான் அதிபராக இருந்தார். 2008-ஆம் ஆண்டு பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து அவர் விலகினார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முஷாரப், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அமிலாய்டோசிஸ் என்பது ஒரு அரிய வகை நோயாகும். இது ஒரு அசாதாரண புரதம் உறுப்புகளில் உருவாகி அவற்றின் இயல்பான செயல்பாட்டில் குறுக்கிடும்போது ஏற்படும்.
இந்தநிலையில், முஷாரப் உடல்நலக்குறைவால் இன்று துபாயில் காலமானார். அவரது மறைவு பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
“சாகப்போனேன், சாகவில்லை வரியாக வாழும் வாணி ஜெயராம்”: மதன் கார்க்கி