முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் கொஞ்சம் முரட்டுத்தனமாக மனிதர். இவர், மீது கொலை வழக்கு கூட உண்டு. ஆனால், தன் மனைவி என்றால் மனிதர் உருகி விடுவார். காரணம் அவரது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டதுதான்.
இரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு மார்பக புற்றுநோய் நான்காவது ஸ்டேஜ் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். எத்தனையோ கோடி செலவு செய்து, பெரிய பெரிய மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை பார்த்துள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் இவர் பிழைக்க ஐந்து சதவீதம் தான் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி விட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் சித்துவின் மனைவிக்கு மூன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை நடைபெற்றது. பின்னர், உணவு மூலமாக புற்று நோயில் இருந்து மீள முடிவெடுத்துள்ளார்.
இதையடுத்து அவரது மனைவிக்கு வேம்பு இலைகள், கட்டி மஞ்சள், எலுமிச்சை, தேங்காய் மட்டும் கொடுத்துள்ளார். சிட்ரஸ் நிறைந்த பழங்கள் , ஆம்லா, பீட்ரூட், துளசி, பூசணிக்காய் போன்றவை உணவில் சேர்த்து கொடுத்ததால், தற்போது புற்று நோயில் இருந்து அவரின் மனைவி மீண்டு விட்டதாக சித்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “பணம் இருப்பதால் மட்டும் நாங்கள் புற்று நோயை வென்று விடவில்லை. உணவுக்கட்டுப்பாட்டால் வென்றோம். சர்க்கரை, மாவுச்சத்து உணவுகளைத் தவிர்த்தோம்.
காலையில் எழுந்தவுடன் முதலில் எலுமிச்சைச் சாறு எடுத்துக்கொண்டு, மாலையில் ஆறு மணிக்கு முன்னரே அன்றைய நாளின் உணவை முடித்துக்கொண்டோம். இப்படி தொடர்ந்து நாற்பது நாள் செய்தாலே கேன்சரை குணப்படுத்த முடியும், வாழ்க்கை முறையை மாற்றினாலே கேன்சரை குணப்படுத்தி விடலாம். இதை உங்கள் அனைவரிடமும் சொல்வதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? – ஷிண்டே பதில்!
விக்கிரவாண்டி மாநாடு… விவசாயிகளுக்கு விருந்து வைக்கும் விஜய்!