வந்தேபாரத் ரயிலுக்கு வெளிநாடுகளில் கடும் கிராக்கி நிலவுகிறது. பல நாடுகள் இந்த ரக ரயிலை வாங்க ஆர்வம் காட்டும் பின்னணி என்னவென்று பார்ப்போம்
இந்தியாவில் வந்தேபாரத் ரயில் பல நகரங்களுக்கு இடையே ஓடி வருகிறது. ரயில் போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதே வந்தேபாரத் ரயில்கள். இந்த ரயில்கள் பிற ரயில்களைக் காட்டிலும் முற்றிலும் தனித்துவமான கட்டமைப்பு வசதிகளைக் கொண்டிருக்கின்றன.
பயோ வேக்யூம் கழிவறைகள், வை-ஃபை வசதி, முழு தானியங்கி கதவுகள் கொண்டவை. தற்போது பயன்பாட்டில் உள்ள எக்ஸ்பிரஸ் ரயில்களில் இருந்து இவை மாறுபட்டுக் காட்சியளிக்கும்.
சுய இன்ஜின் கொண்ட புல்லட் மற்றும் மெட்ரோ ரயில்களைப் போல் இது காட்சியளிக்கும். பிரதமர் மோடி அறிமுகம் செய்த ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்த ரயில்கள் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது, இந்த ரயில்களை வாங்க வெளிநாடுகளும் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.
இது போன்ற ரயிலை மற்ற நாடுகளில் கட்டமைக்க வேண்டுமென்றால் 160 முதல் 180 கோடி தேவைப்படும். ஆனால், இந்தியாவில் 120 முதல் 130 கோடிக்குள் இந்த ரயில் உருவாக்கப்பட்டுவிடுகிறது.
வந்தேபாரத் ரயில் 100 கி.மீ வேகத்தை எட்ட 52 விநாடிகள் போதுமானதாக இருக்கிறது. ஜப்பான் புல்லட் ரயில் 100 கி.மீ வேகத்தை எட்ட 54 விநாடிகள் தேவைப்படுகிறது.
குறைந்த எனர்ஜியை எடுக்கும் இந்த ரயில் வெளியிடும் சத்தமும் மிக குறைவாகவே இருக்கிறது. உள்கட்டமைப்பு வசதிகளும் மற்ற நாட்டு தயாரிப்புகளை விட அற்புதமாக உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதனால், சிலி , கனடா, மலேசியா போன்ற நாடுகள் வந்தேபாரத் ரயிலை வாங்க ஆர்வம் காட்டுவதாக மத்திய ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
தேர்தல் பத்திரம் : நிர்மலா சீதாராமன் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவு!
சிறையில் ஒவ்வொரு நொடியும் உங்களையே நினைத்திருந்தேன்: செந்தில் பாலாஜி உருக்கமான பதிவு!
Comments are closed.