தமிழ்நாட்டிற்கு ரூ. 1201 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு!

Published On:

| By Kavi

டெல்லியில் 49வது ஜிஎஸ்டி கவுன்சில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (பிப்ரவரி 18) நடைபெற்றது.

இதில், தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி இழப்பீடு, ஜிஎஸ்டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், திறன் அடிப்படையிலான வரிவிதிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் (ஜிஓஎம்) அறிக்கையின் ஒப்புதல் தொடர்பான பரிந்துரைகளை ஜிஎஸ்டி கவுன்சில் வழங்கியுள்ளது.

இந்த பரிந்துரைகள் குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 16,982 கோடியாகும்.

இதில் மாநிலங்களின் தலைமை கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட வருவாய் புள்ளிவிவரங்களை வழங்கிய மாநிலங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி ஜிஎஸ்டி இழப்பீடான ரூ 16,524 கோடியையும் மத்திய அரசு வழங்குகிறது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் எந்தத் தொகையும் இல்லாததால், இந்தத் தொகையைச் சொந்த ஆதாரங்களிலிருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு ஜூன் மாத இழப்பீடாக ரூ. 1201 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.73 கோடியும் விடுவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பென்சில் ஷார்ப்னருக்கான வரியை 18%லிருந்து 12% ஆக குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரியா

“34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை”-ஈரோடு தேர்தல் அதிகாரி பேட்டி!

டிஜிட்டல் திண்ணை: தேர்தல் ஆணையத்தின் சிவசேனா தீர்ப்பு: எடப்பாடி, பன்னீரின் எதிர்பார்ப்பு! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share