இந்தியன் நேவியில் இப்படியும் ஒரு சாதனை… இரு போர்க்கப்பல்களில் தலைவராக அக்கா- தம்பி!

இந்தியா

இந்தியன் நேவியில் முதல் முறையாக அக்கா – தம்பி இரு வேறு போர்க்கப்பல்களில் தலைவராகி சாதனை படைத்துள்ளனர்.

மும்பையை சேர்ந்தவர் பிரர்னா தீஸ்தாலே. மும்பை சேவியர்ஸ் கல்லூரியில் படித்து விட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு இந்தியன் நேவியில் பணியில் சேர்ந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை தினத்தன்று ஐ.என்.எஸ்.டிரின்க்தா  போர்க்கப்பலின் கமாண்டிங் ஆபிசராக பிரர்னா நியமிக்கப்பட்டார். இந்திய போர்க்கப்பலில் பெண் ஒருவர் கமாண்டிங் ஆபிசராக நியமிக்கப்பட்டது இதுவே முதன்முறை.

பிரர்னா தனது தம்பி இஷானையும் ஊக்கப்படுத்தி இந்திய கடற்படையில் இணைய வைத்திருந்தார். தற்போது, அவரின் தம்பி இஷானும் போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விபூதிக்கு  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியன் நேவியில் அக்காவும் தம்பியும் போர்க்கப்பல்களின் தலைவராக பணிபுரிவது இதுவே முதன்முறை.

பிரர்னா மிகப்பெரிய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் சென்னையின் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். இதையடுத்து, ஐ.எஸ்.எஸ். டிரிங்க்டா தலைவராக பொறுப்பேற்றார். கடற்படை அதிகாரியை திருமணம் செய்துள்ள பிரர்னாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இது குறித்து பிரர்னா கூறுகையில், “தற்போது  போர் விமானங்களில் கூட பெண் பைலட்டுகள் வந்து விட்டனர். அந்த வகையில், கடற்படையில் நான் சாதித்துள்ளேன். பெண்கள் ஆர்வமாக ராணுவங்களில் இடம் பெற முன் வர வேண்டும். வீரர்களுக்கு இணையாக நானும் எனது பணியை செய்கிறேன். ராணுவத்தில் இணைவது சிறப்பு தகுதியையும் நல்ல ஒழுக்கத்தையும் தரும். கடற்படையில் இணைவது வேலைக்காகவோ  அல்லது சம்பளத்துக்காகவோ அல்ல. என்னை பொறுத்த வரை கடற்படைதான் எனது வாழ்க்கை” என்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 இந்தியன் ரயில்வே 96 சதவிகிதம் மின்மயம்… டீசல் இன்ஜீன்கள் என்ன ஆகும்?

பவகத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்ற அக்மார்க் அமெரிக்கர்… யார் இந்த துளசி?

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *