ஃபிலிப்கார்ட் பண்டிகை விற்பனை : 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை!

Published On:

| By Kavi

ஃப்லிப்கார்ட்டின் பண்டிகை கால விற்பனை நாட்களான ’பிக் பில்லியன் டேஸ்( Big billion days)’ காலம் தொடங்கி 7 நாட்கள் ஆகியுள்ள நிலையில், 1.4 பில்லியன் வாடிக்கையாளர்கள் வருகை தந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டிலும் பெண் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பண்டிகை கால விற்பனையின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 4 மில்லியன் பேக்கேஜ்கள் ஃபிலிப்கார்ட்டின் கிரானா பார்ட்னர்களால்(kirana partners) டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டின் பண்டிகை கால விற்பனையோடு ஒப்பிடுகையில், இந்தாண்டில் ஃபிலிப்கார்ட் நிறுவனம் 6 மடங்கு வளர்ச்சியைக் கண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தாண்டில் 1 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும், ஃபிலிப்கார்ட்டின் கிரானா திட்டத்தின் மூலம் இந்தியாவின் சில்லறை வர்த்தக சுற்றுச்சூழல் அமைப்பின் மற்றொரு தூணை வலுப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்கார்ட் நிறுவனத்தின் கிரானா பார்ட்னர்களால் இந்த ’தி பிக் பில்லியன் டேஸ்’ பண்டிகை காலங்களில் மட்டும் 4 மில்லியனுக்கும் அதிகமான டெலிவரிகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஃபிலிப்கார்ட் போலவே அமேசான் நிறுவனத்தின் ‘கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’, ஏஜியோ, மீஷோ போன்ற இணைய ஷாப்பிங் செயலிகளிலும் பல்வேறு தள்ளுபடி விற்பனைகள் நடைபெற்று வருகின்றன. பல தரப்பு மக்களிடையே இது போன்ற இணைய செயலிகளில் ஷாப்பிங் செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

– ஷா

விஜய்யின் லியோ – ரஜினி சொன்னது என்ன?

வாச்சாத்தி வழக்கு : ஐ.எப்.எஸ் அதிகாரிகள் சரணடைய உத்தரவு!