40 நாள் பயணத்தை தொடர்ந்து சந்திரயான் 3 லேண்டர் இன்று (ஆகஸ்ட் 23) நிலவில் கால் பதித்துள்ளது.
நிலவில் தரையிரங்கியதும் முதல் செய்தியாக , “இந்தியா, நான் என் இலக்கை அடைந்துவிட்டேன். நீங்களும் தான்” என்று தகவல் அனுப்பியது.
இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணிக்கு தரையிரங்கிய நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு பின்னா் அதில் உள்ள ரோவா் சாதனம் வெளியேறி ஆய்வு மேற்கொள்ளும். லேண்டா் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவா் சாதனம் நிலவின் தரைப்பரப்பில் பயணித்தும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தெரிவித்தது.
Chandrayaan-3 Mission:
Updates:The communication link is established between the Ch-3 Lander and MOX-ISTRAC, Bengaluru.
Here are the images from the Lander Horizontal Velocity Camera taken during the descent. #Chandrayaan_3#Ch3 pic.twitter.com/ctjpxZmbom
— ISRO (@isro) August 23, 2023
லேண்டர் தரையிரங்கி 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் முதல் அப்டேட்டை கொடுத்துள்ளது இஸ்ரோ.
“சந்திராயன் 3 லேண்டர் மற்றும் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையமான MOX-ISTRAC இடையே தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.
நிலவில் லேண்டர் தரையிரங்கும் போது ஹரிசாண்ட்டல் வேகக் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்” என்று தெரிவித்து அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளது.
பிரியா
நிலவில் இந்தியா: சந்திரயான் 3 திட்ட இயக்குநர் சொல்வது என்ன?
யாரும் அடையாத சாதனை: இஸ்ரோவிற்கு பிரதமர் வாழ்த்து!