மகாத்மாவுக்கு ஸ்டாம்ப் வெளியிட்ட முதல் நாடு எது தெரியுமா?

Published On:

| By Kumaresan M

அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி வருகிறது. இதையடுத்து, பலரும் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்டாம்புகளை வாங்கி வைத்துள்ளனர். இதனால், இந்த ஸ்டாம்புகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சரி… மகாத்மா காந்திக்கு எப்போது முதன் முதலில் ஸ்டாம்ப் வெளியிடப்பட்டது தெரியுமா? மகாத்மா 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி கொல்லப்பட்டார். தொடர்ந்து, அவரது நினைவாக 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி அவரின் உருவம் பொறித்த ஸடாம்ப் வெளியிடப்பட்டது.

அதில், பாபு என்று இந்தி மற்றும் உருதுவில் எழுதப்பட்டிருந்தது. இந்தியாவில் ஸ்டாம்பில் முதன் முதலாக இடம் பிடித்தவர் மகாத்மாதான். 10 ரூபாய்க்கு இந்த ஸ்டாம்ப் விற்கப்பட்டது. பிற்காலத்தில்  பல வித விலைகளில்  மகாத்மாவின் ஸ்டாம்புகள் அவ்வப்போது, வெளியிடப்பட்டு கொண்டிருந்தன.

கிட்டத்தட்ட 100 நாடுகள் மகாத்மா உருவம் பொறித்த ஸ்டாம்புகளை வெளியிட்டன. மகாத்மாவுக்கு முதலில் ஸ்டாம்ப் வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா ஆகும். 1961 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அமெரிக்கா மகாத்மாவின் ஸ்டாம்பை வெளியிட்டது.

ஆனால், தற்போது மகாத்மா காந்தியின் உருவம் பதித்த ஸ்டாம்புகள் போஸ்ட் ஆபிஸ்களில் கிடைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது,  பாலகங்காதர திலகர், வாஜ்பாய், அப்துல் கலாம், எம்.எஸ். சுப்புலட்சுமி, ரவீந்தரநாத் தாகூர், ராமனுஜர், சத்ரபதி சிவாஜி போன்றவர்களின் ஸ்டாம்புகள்தான் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஹெச்.டி.எப்.சி வங்கியில் சேரில் இருந்து விழுந்து பெண் ஊழியர் பலி… வேலை அழுத்தம் காரணமா?

தென் தமிழகத்தில் மழை பெய்யுமா? வெயில் வாட்டுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share