உத்தரப்பிரதேசத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குழந்தைகளின் கண்முன்னே தந்தை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் துணி வியாபாரம் செய்து வருபவர் அர்ஷத் (32). இவர் தனது குழந்தைகளுடன் நீச்சல் குளத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட சிறிய பிரச்சினை கைகலப்பாக மாறி துப்பாக்கிச்சூடு வரை சென்றுள்ளது.
பேசிக்கொண்டிருந்தபோதே அர்ஷத் மீது ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அர்ஷத் உயிரிழந்தார்.
நீச்சல் குளத்தில் அவரது குழந்தைகள் உடன் இருந்தும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் பிலால் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டுள்ள பிலால் மீது ஏற்கெனவே 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீச்சல் குளத்தில் நடந்த பிரச்சினைக்கு என்ன காரணம் என்று தெரியாத நிலையில் நீச்சல் குளத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள அர்ஷத் துப்பாக்கியால் சுடப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பாஜக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : மாங்கொட்டை ரசம்
Gold Rate: குறைந்த தங்கம் – வெள்ளி விலை!
பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் சூரியின் ’கருடன்’: 5 நாட்களில் இத்தனை கோடியா?
உபியில வன்முறை கலாச்சாரம்லாம் இல்ல, அமைதிப் பூங்கானு இங்க கூவுனவைங்களைப் பாத்திங்க?