Farmers union ministers third round talks inconclusive

பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!

இந்தியா

Farmers union ministers third round talks inconclusive

விவசாய அமைப்புகள் உடனான மத்திய அரசின் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிந்தது.

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்புகள் ஹரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநிலங்களில் இருந்து டெல்லி நோக்கி செல்லும் பேரணியை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கினர்.

விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகள் அமைத்து போலீசார், துணை ராணுவப்படையினர் தடுத்தனர்.

மேலும், விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு, தண்ணீரை பீய்ச்சி அடித்தல் மற்றும் தடியடி தாக்குதல் நடத்தினர். இதனால் டெல்லியின் எல்லை பகுதிகளில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

Farmers union ministers third round talks inconclusive

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்தது. இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா, நித்யானந்த்ராய் ஆகியோருடன் விவசாய அமைப்புகள் நேற்று சண்டிகரில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையானது இரவு வரை நீடித்தது. பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஒருங்கிணைப்பாளர் சர்வான் சிங் பாந்தர் கூறும்போது,

“நாங்கள் எழுப்பிய அனைத்து கோரிக்கைகள் மீதும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நாங்கள் விவாதத்தை முன்வத்தோம்.

அதற்கு அமைச்சர்கள் கால அவகாசம் தேவை என்றார்கள்.  எங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்; டெல்லி நோக்கி செல்லும் எங்கள் பேரணி தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை விரைந்து வலியுறுத்தக்கோரி விவசாய அமைப்புகள் இன்று பார்த் பந்த்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பாரத் பந்த் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மாற்றுத்திறனாளிகள் நலன்களை பாதுகாக்க வேண்டும்: அன்புமணி

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

பியூட்டி டிப்ஸ்: விஸ்வரூபம் எடுக்கும் பொடுகுத்தொல்லை.. வீட்டிலேயே இருக்கு சிகிச்சை!

சென்னை மெட்ரோ: பெண்களின் பாதுகாப்புக்காக ‘Pink Squad’

Farmers union ministers third round talks inconclusive

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

1 thought on “பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் விவசாயிகள் போராட்டம்!

  1. இந்தியாவில் இந்த டாபர்கள் மட்டுமே விவசாயிகளா? 😡

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *