விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் இன்று (ஆகஸ்டு 22) விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
டெல்லி ஜந்தன் மந்தரில், போலீசார் வைத்திருந்த தடுப்புகளை அகற்றி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர்.
அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் பாரதிய கிசான் யூனியன் உள்பட பல்வேறு விவசாய சங்கங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்தால், டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் போலீசாரால் சோதனை செய்யப்படுகிறது.
முன்னதாக விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் காசிப்பூர் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு வருடத்திற்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராடிய நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
தீவனங்கள் விலை உயர்வு: கால்நடை வளர்ப்பை கைவிடும் விவசாயிகள்!