இந்திய உணவுகளில் பூண்டு அதிகமாக சேர்ப்பார்கள். உணவு செரிமானத்துக்கு இது அதிகமாக உதவும். தினமும் இரண்டு பூண்டு சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்றும் கூறுவார்கள்.
இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை என்று கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் நூலில் எழுதியுள்ளார்.
‘பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே போகலாம்’ என்றும் கிராமப்புறங்களில் சொலவடை உண்டு. உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும் உடலுக்கு உற்ற துணை புரியும் பூண்டு மருத்துவ உலகின் வரப்பிரசாதம். சைவம், அசைவம் என எல்லா வகை உணவிலும் பூண்டு சேர்ப்பதை தவிர்க்க முடியாது.
இப்படி மருத்துவ குணம் கொண்ட பூண்டுவில் கூட கலப்படம் வந்தால் உடல் நலத்துக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும். மகராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் பஜோரியா நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற போலீஸ்காரரின் மனைவி ஒருவர் தெருவில் பூண்டு விற்பவரிடத்தில் 250 கிராம் வாங்கியுள்ளார்.
வீட்டுக்கு வந்து உறித்து பார்த்த போது, பூண்டு பற்கள் தனியாக வரவில்லை. கூர்ந்து பார்த்த போது, பூண்டுவுக்குள் சிமெண்ட் வைத்து அடைத்திருப்பதை பார்த்து அதிர்ந்து போனார். எடையை அதிகரிக்க சிமெண்ட் வைத்து கலப்படம் தெரிய வந்தது.
நல்ல பூண்டுக்ளுக்கிடையே இப்படி சிமெண்ட் அடைத்த பூண்டுவை கலந்து விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல தேசிய மீடியாக்கள் போலி பூண்டு சந்தைக்குள் வந்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. தற்போது, சிமெண்ட் வைத்து அடைத்து விற்கப்பட்ட போலி பூண்டுவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
‘கலைஞர் எனும் தாய்…’ – எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் நூல்!
“மகளே என்று பேசினார், பின்னர் கூப்பிட்டார்!” மலையாள சூப்பர்ஸ்டார் மீது திலகன் மகள் குற்றச்சாட்டு!